வாழ்வா சாவா பயணத்தில் அதிரை சேதுரோடு 10வது வார்டு மக்கள் .... ( வீடியோ மற்றும் புகைப்படங்கள்)

0
நமதூர் சேதுரோட்டின் தென்புறமாக கழிவுநீர் வாய்க்கால் மேற்கு நோக்கி சென்று கடலில் கலக்கும்.ரோட்டின் வடபுறமாக உள்ள தெருக்களில் இருந்து தான் கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த கழிவு
நீர் அனைத்தும் வந்து இங்கு தேங்கக்கூடிய சாக்கடையாகதான் இந்த பகுதி கருதப்படுகிறது.இந்த பிரச்சனையால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் சாக்கடை புகுந்து இந்த பகுதியில் நாம் வாழ்வதா இல்லை வேரு பகுதிக்கு காலி செய்து விட்டு செல்வதா  என்று கூறும் அளவுக்கு இவர்களின் நிலைமை மிகவும் மோசமாகவே காணப்படுகிறது.இவர்கள்  இதற்காக எத்தனையோ மனுக்களை பல அதிகாரிகளிடமும்  பலவிதமான கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.ஆனால் எந்த பயனும் இவர்களின் முயற்ச்சிக்கு கிடைக்கவில்லை என்பது இப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் தெரிகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆதரங்கள் பின்வருமாறு ....


         
                          





தகவல்: N.காலித் அஹமது (இந்திய மாணவர் இயக்கம்)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)